/1Layer Panel:
Layer Panel ஐ நன்றாக புரிந்து கொண்டால் Adobe Photoshop பாதி கற்றுகொவீர்கள் இதில் நிறைய option இருக்கிறது ,எதுக்கு எது பயன்படும் என்று தெளிவாக Example படத்துடன் கூறியுள்ளேன்(இந்த option எல்ல்லாம் எதுக்கு என்று தெரியாமலே போய்விடும்).அதற்குத்தான் பெரிய Topic ஆக இருக்கிறது,சும்மா கடமைக்கு சொல்லாமல், விளக்கமாக கூறியுள்ளேன்.
Layer Panel என்பது அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)ன் இதயம் என்று சொல்லலாம்.ஏனெனில் முழுக்க முழுக்க layer base பண்ணிதான் work ஆகும்,layer arrangement(வரிசைப்படுத்துவது)ரொம்ப ரொம்ப முக்கியம்,புதிய file create செய்தவுடன் ‘Background with lock’ உடன் layer panel ல் தோன்றும் மற்றும் lock ‘remove’செய்தால் தான் எந்த எடிட்டிங் work ம் மற்றும் layer right click ல் நிறைய option வரும்,(lock ன் மீது single or double click(version ஐ பொறுத்து மாறுபடும்) செய்தால் ‘lock remove’ஆகிடும்.layers அனைத்தும் எப்போதும் க்ழிருந்து தான் மேல் வரிசையில் இருக்கும்.அது layer வேணாலும் இருக்கலாம்(Tex/shape/Smart object/Adj.layer).
குறிப்பு:படத்தை open செயததும் எப்போதும் Duplicate(Ctrl+J)எடுத்து வேலை செய்வது நல்லது,ஏனெனில் orginal படம் பாதிக்காது,Duplicate(Ctrl+J) ல் edit பண்ணுங்கள்.
Lock remove ரொம்ப சுலபம்,
Lock ன் மேல் single click செய்தால் ,அப்போதுதான் Layer ஆகா மாறும்,
உதாரணமாக படத்தை பார்க்கவும்,
Layer Rename-Layer Text ன் மேல் double click செய்தால் போதும்,ஆனால் வேர் எங்கும் click செய்யக்கூடாது ‘Blending option’open ஆகிடும்,தேவையான பெயர் வைக்கலாம்(ஆனால் layer ல் என்ன செய்திருகீர்களோ அதை பெயர கொடுப்பது நல்லது).Text ன் மேல் double click செய்தால் மட்டும்தான் Rename செய்ய முடியும்.
உதாரணமாக படத்தை பார்க்கவும்,
படம் 1 படம் 2
ஒவ்வொரு layer ம் தனி தனியாக இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது,ஏனெனில் எதாவது edit செய்வது மற்றும் color correction,opacity,fill,Transform பண்ணுவதும் இந்த மாறி அனைத்தும் பண்ணுவதற்கு உதவும் மற்றும் அந்த layer ல் அதற்கு தேவையான பெயர் கொடுத்தால் ரொம்ப நல்லது,ஏனெனில் அதிமான layers இருக்கும்போது கண்டுபிடிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
இந்தமாறி icon
இருந்து கொஞ்சம் color(black) மாறி இருந்தால் Layer Panel ஓபன் ஆகியிருக்கு என்று அர்த்தம்.அப்படி காண முடியவில்லை என்றால் Window-->Layer என்பதை ஒரு கிளிக் செய்தால் போதும்,அதுவும் இல்லை எனில் F7(shortcut)keyboard ல் அழுத்தவும் ‘Layer Panel’open ஆகிவிடும்.
பெரிய file/document open செய்தலோ அல்லது create செய்தலோ அதில் உள்ள layers ஐ தேடி கண்டுபிடிபது கடினம்,ஆனால் இந்த ‘Filter Type”option ஐ use பண்ணி ரிம்ப சுலபமாக கண்டுபிடிக்கலாம்\.
Layer Panel ல் உள்ள kind options செய்தால் இப்படி தோன்றும்,
அதில் Name’என்பதை தேர்வு செய்தால் பக்கத்தில் search window வரும் அதில் நீங்கள் தேடவேண்டிய layername தெரிந்து இருந்தால் அதை Type பண்ணி தேடலாம் அல்லது Layer Rename செயதிருதாலோ அதை வைத்தும் தேடலாம்.அந்த பெயரில் உள்ள அனைத்தும் வந்துவிடும்.
எ.கா,நான் ‘1’ என்று type செய்து அதை தேடியுள்ளேன் அந்த பெயரில் உள்ள அனைத்தும் layer ம வரும்.
Effect-அதில் ‘Effect’’என்பதை தேர்வு செய்தால்,layer ல் என்ன effect use பண்ணியிருகிறார்கள் என்பதை நீங்களே தேர்வு செய்த தேடலாம் ,தேர்வு செய்தால் அதுவே வந்துவிடும்.இந்த file ல் எதனை Effect கொடுத்துருந்தாலும் வந்துவிடும்.
Mlode-அதில் ‘Mode’’என்பதை தேர்வு செய்தால்,layer ல் என்ன ‘Blending Mode’ use பண்ணியிருகிறார்கள் என்பதை நீங்களே தேர்வு செய்த தேடலாம் ,தேர்வு செய்தால் அதுவே வந்துவிடும்.இந்த file ல் எதனை Blending Mode கொடுத்துருந்தாலும் வந்துவிடும்.
Atttribute-அதில் ‘Atttribute’என்பதை தேர்வு செய்தால்,layer ல் என்ன Atttribute(அதாவது Linked/Locked/Visible(பார்க்கூடிய/Eye View)/Empty Layer(layer ல் எதுமே இல்லாமல்)/ClippingMask(அதன் கீழே உள்ள layer க்குள் இருப்பது/Advance Blending(Blend if தான்) இதுபோன்று) use பண்ணியிருகிறார்கள் என்பதை நீங்களே தேர்வு செய்த தேடலாம் ,தேர்வு செய்தால் அதுவே வந்துவிடும்.இந்த file ல் எத்தனை Atttribute இருந்தாலும் வந்துவிடும்.
Color-அதில் ‘Color’என்பதை தேர்வு செய்தால்,layer ல் என்ன Color use பண்ணியிருகிறார்கள் என்பதை நீங்களே தேர்வு செய்த தேடலாம் ,தேர்வு செய்தால் அதுவே வந்துவிடும்.இந்த file ல் எத்தனை Color கொடுத்துருந்தாலும் வந்துவிடும்.
Smart Object-அதில் ‘Smart Object’என்பதை தேர்வு செய்தால்,படம் 2 ல் உள்ளவாறு icons வரும்,அதில் தேவையானதை தேர்வு செய்யவும்.
Hilight 1 -படத்தில் (உள்ளுக்குள்ளே மாற்றம் செய்ய விரும்பினால் இதை அழுத்தவும்(Edit Content)என்று சொல்லுவார்கள்.
Hilight 2 - layers லிங்க் செய்திருந்தால் இதை click செய்யவும்.(2/3 க்கும் மேற்பட்ட smart object).
Hilight 3 -file ல் Place Linked ஐ use பண்ணி ஏதாவது image ஐ place பண்ணியிருந்தால்,இதை use பண்ணவும்,எப்போதுமே லிங்க் இருந்துகொண்டே(file க்கும் image க்கும்)இருக்கும்,
எ.கா,
Deleted images or location
Hilight 4 -smart object பற்றிய HELP icon.(இது தேவையில்லை).
Hilight 5 -smart object ‘layer குள்ள’ வேற image Replace செய்வது,
எ.கா,
Mockup file
Selected- சில சமயங்களில் layers நிறைய இருக்கும்போது எந்த layer தேர்வு செய்துளீர்கள் என்பது தெரியாது,அப்போது இதை use பண்ணலாம்.எந்த layer தேர்வு செய்துலீர்கள் என்று correct ஆ காட்டும்.
Artboard- அதில் ‘Artboardt’என்பதை தேர்வு செய்தால்,file ல் எத்தனை Artboard use இருந்தாலும் அதுவே வந்துவிடும்.
Layer Panel ல் உள்ள options களை பற்றி விரிவாக பார்ப்போம்.
WWWDSPixel Layer-
இதை click செய்தால்black color ஆE3DSEA1AA1A ` q qq QQQ க மாறும்.அதேபோல் மற்ற அனைத்து icon color(black) ம் மாறும். file ல் உள்ள அனைத்து Pixel layer(Rasterised layer) ம் ஒரே click ல் வந்துவிடும்.
Minimize-இதை click செய்தால்,சிறிய icon போல் Layer Panel மாறிவிடும்.
Close-இதை click செய்தால் layerpanel மொத்தமாக மூடிவிடும்.
Filter ON/OFF-தேவையெனில் ON/OFF செய்யலாம்.இதை use பண்ண வேண்டிய அவசியமில்லை.ஏனனெனில் ஏதாவது Filter ஐ click செய்யும்போது அதுவே ON ஆகிடும்,மறுபடியும் அதே filter ஐ click செய்தால் OFF ஆகிடும்.
Adjustment Layer--இதை click செய்தால் file ல் use பண்ணியிறுக்கும் ‘Adjustment Layer’அனைத்தும் ஒரே click ல் வந்துவிடும்.
Text Layer-இதை click செய்தால் file ல் use பண்ணியிறுக்கும் ‘Text Layer’அனைத்தும் ஒரே click ல் வந்துவிடும்.
Shape Layer Filter-இதை click செய்தால் file ல் use பண்ணியிறுக்கும் ‘TShape Layer’ம் அனைத்தும் ஒரே click ல் வந்துவிடும்(எந்த shape ஆக இருந்தாலும் சரி (Eclipse/Rectangle/Polygon).
Smart Object Filter-இதை click செய்தால் file ல் use பண்ணியிறுக்கும் ‘Smart Object’அனைத்தும் ஒரே click ல் வந்துவிடும்.
Opacity & Fill -இரண்டுமே ஒரே மாதிர்யான வேலையே செய்யும்,ஆனால் சிறிய வேறுபாடு தான்,Opacity என்பது layer மொத்தமாக color குறையும்/கூடும்,ஆனால் fill என்பது fill color மட்டும் கூடும்/குறையும்.
Stroke ஏதாவது இருந்தால் அதில் எந்த மாற்றமும் செய்யாது.
எ.கா,
Lock Layer-ஒரு குறிப்பிட்ட layer ஐ lock/unlock செய்வது அல்லது Multiple Layer ஐ lock/Unlock செய்வது(select Multiple Layer-Ctrl கீயை விடாமல் அழுத்திக்கொண்டே தேவையான layer ஐ click செய்வது)..
எ.கா,
Delete Layer-layer ஐ click செய்து ‘Delete’icon ஐ click செய்யலாம் அல்லது layer ஐ click செய்து keyboard’ல் ‘Del’ கீயை அழுத்தலாம்.
Create New Layer-இந்த
icon ஐ click செய்தால் அல்லது (Ctrl+Shift+N)அழுத்தியவுடன்,புதிய layer create ஆகும்,தேவையெனில் அதற்கு name(பெயர்),blending mode,மற்றும் layer க்கு color கொடுத்துக்கலாம்.
ஆன்னல் ஒவ்வொரு புதிய layer create செய்யும்போதும் ‘Transparent’ஆக இருக்கும்.
எ.கா
Group Layer-இந்த
icon ஐ click செய்தால் அல்லது (Ctrl+G)அழுத்தியவுடன் Group layer create(Group 1 என்ற பெயரில்)ஆகும்,தேவையான layer எல்லாம் Ctrl கீயை அழுத்திக்கொண்டே தேவையான Layer எல்லாம் click செய்து கொண்டே வந்தால்(Multiple layer selection)ஆகிடும்,பிறகு Ctrl+G அல்லது இந்த
icon ஐ click செய்யவும்.
எ.கா,
கீழே உள்ள படம் பார்க்கவும் இப்டித்தான் இருக்கும் தேவையென்றால் Group1 க்கு பக்கத்தில் சிறிய அம்புகுறி இருக்கும் அதை click செய்து பார்த்து கொள்ளலாம்,வேற எங்கயும் click செய்யகூடாது,ஏனெனில் ‘blending option’open ஆகிடும்.
Adjustment Layer-இந்த icon ஐ click செய்தால்,கீழே உள்ள options மாறி வரும்,ஆனால் முடிந்தவரை Adjustment Layer use செய்வது ரொம்ப நல்லது,ஏனெனில் with Mask உடன் வந்துவிடும்,தேவையான போது mask ஐ click செய்து Brush tool ஐ use பண்ணி மறைக்கலாம்/கட்டலாம்.இதை create செய்யும்போது அதனுடைய பெயரிலே வந்துவிடும்.Adjustment Layer ஐ பற்றி தனி post ல் விளக்கமாக பார்ப்போம்.
Mask- Create ask என்பது ஏதாவது ஒரு layer ல் Maskபோட வேண்டுமென்றால் இந்த icon ஐ click செய்யவும்.
எ.கா,
Filter-இந்த icon ஐ click செய்தால்,நீங்கள் என்ன use பண்ண வேண்டுமென்று நினைகீர்களோ அதை click செய்யவும்,நான் இப்போது Stroke use பண்ணியிருக்கேன்.Effect ஐ பற்றி தனி post ல் விளக்கமாக பார்ப்போம்.
எ.கா,
Hilight பண்ணியிருக்கும் இடத்தில சிறிய அம்புக்குறி இருக்கிறது சிறிய அம்புகுறி இருந்தால் இன்னும் நிறைய ‘option’இருக்கு என்று அர்த்தம்.அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)ல் எங்கு இந்தமாரி சிறிய அம்புக்குறியை பார்த்தாலும் சரி இன்னும் நிறைய ‘options’இருக்கு என்றுதான் அர்த்தம்(நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்).
Link Layer-
சங்கிலி போன்ற வடிவில் இருக்கும்,(2 அல்லது அதற்கு மேற்பட்ட layer ஐ தேர்வு செய்தால் மட்டும் இந்த ‘icon’ enable ஆகும்.’Alignment’கொஞ்சம் கூட மாறாமல் இருக்க இதை use பண்ணலாம் மற்றும் ஒரு layer உடன் மற்றொரு layer ம் நகர்த்தும்போது வரவேண்டுமென்றால் இதை use பண்ணவும்,அதற்கு முன்பு எந்த layer உடன் எந்த layer link செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யவும்.
Multiple layer link- Ctrl விடாமல் அழுத்திக்கொண்டே தேவையான layer எல்லாம் தேர்வு செய்யவும்,
எ.கா,
Ctrl/Shift அழுத்திக்கொண்டே தேர்வு செய்யலாம்.தேர்வு செயற்தா பிறகு link செய்யலாம்,
எ.கா கீழே உள்ள படம்,
தேவையில்லையெனில் அந்த layer ஐ click செய்தால் கீழே சங்கிலி icon போன்று இருக்கும் அதை click திரும்பவும் link remove ஆகிட்டு பழைய நிலைமைக்கு வந்திடும்.
படத்தில் உள்ளவாறு steps ஐ follow பண்ணவும்.Ctrl/Shift கீயை use பண்ணி Mutiple layer தேர்வு செய்யலாம்.(Link/Unlink layer/Group layer/Delete Multiple layer)அனைத்துக்கும் இந்தமாதிரி கீயை அழுத்தி தேர்வு செய்யவும்.
Multiple layer தேர்வு செய்ய வேண்டுமெனில்,
Ctrl-குறிப்பிட்ட மற்றும் தேவையான layer ஐ ஒன்று ஒன்றாக தேர்வு செய்யலாம்.
Shift- தொடர்ச்சியாக தேர்வு செய்யலாம்.அதாவது படம் 3 ல் உள்ளவாறு (Ellipse 1 லிருந்து Layer 2 வரை வேண்டும் அதற்காக Ellipse 1 ல் ஒரு click செய்து விட்டு எதுவரை வேண்டுமோ அந்த layer ஐ click செய்தால் அதுவரை தேர்வு ஆகிடும்.
Visiblility(Hide/View Eye view)-குறப்பிட்ட layer ஐ பார்ப்பதும்,பார்க்காமல் செய்வதும்,Visiblility(Eye view) இருந்தால்(பார்க்கமுடியும்) ON ஆகிருக்கு என்று அர்த்தம்,
Visiblility(Eye view) இில்லையெனில்(பார்க்கமுடியாது) OFF ஆகிருக்கு என்று அர்த்தம்,
நான் இப்போது ‘Pixel layer’என்ற எழுத்தை மறைத்து காட்டியுள்ளேன்.
படம் 1 படம் 2
Lock All- layer அனைத்தும் மொத்தமாக lock ஆகும்,அந்த layer ல் எந்த ‘editing’ work ம் செய்ய முடியாது(Including erase/brush).
Lock ல் இரண்டு வகை இருக்குறது,
Ctrl+/ - Total lock/Unlock
Shift+Ctrl+/ - Lock options(தேவையான options தேர்வு செய்துகொள்ளலாம்.
Layer ஐ Link செய்திருந்தால் லிங்க் செய்யப்பட்ட அனைத்து layer ம் இந்த shortcut ஐ பயன்படுத்தி ஒரே click ல் தேவையான option ஐ tick செய்து lock செய்யலாம் மற்றும் link செய்யவில்லை என்றாலும் இதே option ஐ use பண்ணலாம்.
Artboard Lock-முதலில் Artboard lock ஐ click செய்துதான் மற்ற lock ஐ use பண்ணவும்,உங்கள் file ல் எத்தனை Artboard இருந்தாலும் Artboardஐ கிளிக் செய்து,அதன்பிறகு மற்ற lock ஐ பயன்படுத்தவும்.
Position lock-layer ஐ move மட்டும் செய்ய முடியாது மற்றதெல்லாம் செய்யலாம்.
Pixel lock-paint/brush மட்டும் செய்ய முடியாது மற்றதெல்லாம் செய்யலாம்.
Transparent lock-Transparent ஆ இருக்கும் பகுதியில் erase/brush செய்ய முடியாது.
தேர்வு செய்த layer கீழே இருக்கும் layer இடன் எப்படி ‘Blend/கலந்து(Mix) இருக்க வேண்டும் என்பதை சொல்வது,அதிகமாக Mutiply,Color Burn,Screen,Overlay,Soft Light,Vivid Light,Color இந்த Blending Mode தான் எல்லோரும் use பண்ணுவார்கள்.
Over All(Lock option)-
இந்த icon ல் ஒன்று மட்டும் அழுத்தினால் அந்த lock பகுதி மட்டும் lock ஆகியிருக்கும்(safe ஆகா இருக்கும்)மற்றதெல்லாம் work ஆகும்.ஆனால்
இதை அழுத்தினால் Lock All(Total ஆ)option கொடுத்தால் layer ல் எதுமே செய்ய முடியாது.
27 Blending Mode ம் தனியாக ‘POST’ல் பார்ப்போம்.
Layer Options (Menu):
New Layer/Shift+Ctrl+N-புதிய layer create செய்வது அதன் கீழே மற்றும் Background layer எந்த பாதிப்பும் வராது.
Layer 1 என்ற இடத்தில் வேற ஏதாவது name கொடுத்துக்கலாம்.
-Use Previous Layer to Create Clipping Mask tick செய்தால் இது Clipping Mask தானாக வந்துவிடும்.தனியாக போயிடு Clipping Mask செய்ய தேயில்லை.
Color என்பது லேயர் என்ன கலராக வேண்டும் என்பதே(visiblity அருகில்)
Mode-Blending mode தான்,அந்த layer க்கு என்ன blending mode தர போகிறீர்கள் என்பது,
Opacity-create செய்யும் layer ன் Transparency level தான்.
.
Copy CSS - அந்த layer ந CSS coding ஆக copy ஆகியிருக்கும்,பொதுவாக web designer க்கு use ஆகும்.இது மாதிரித்தான் இருக்கும்,.
.Cartoon_Rocket_Ship_Clipart_Illustration__Rocke {
background-image: url("Cartoon Rocket Ship Clipart Illustration, Rocket, Clipart, Illustration PNG Transparent Image and Clipart for Free Download.png");
position: absolute;
left: 300px;
top: 0px;
width: 1500px;
height: 1500px;
z-index: 2;
}
Copy SVG - அந்த layer ன் XML coding ஆக copy ஆகியிருக்கும்,பொதுவாக web designer க்கு use ஆகும்.சிறிய vector icon செய்வதற்கு use பண்ணுவாங்க.
Duplicate Layer-இதை கிளிக் செய்யும்போது Artboard ஐ duplicate செய்யவிரும்பினால் படம் 1 ஐ போன்று காட்டும்,layer ஐ duplicate செய்ய விரும்பினால் படம் 2 போல் காட்டும்,இந்த படத்தில் என்ன சொல்வது என்றால்,
Source:
Duplicate- எதிலிருந்து நகல் எடுக்க போகிறீர்கள் என்பது,
As- நகல் எடுக்கின்ற layer/Artboard என்ன name ல் வர வேண்டும் என்பது,
Destination(முக்கியமானவை):
எந்த Document க்கு நகல் எடுக்க போகிறீர்கள் (Select anyone)
Hilight 1 என்பதை எது தேர்வு செய்தால்(எந்த Document ல் வர வேண்டும் என்பது) அதில் Name மட்டுமே தர முடியும்.
Delete Layer- create New Layer போலதான் இதுவும் layer யோ /Artboard யோ தேர்வு செய்து Delete icon ஐ அழுத்தலாம் அல்லது Keyboard உள்ள Del பட்டன் ஐ அழுத்தலாம். layer ஆக இரூந்தால் படம் 1 ல் காட்டியது போல் வரும்,Artboard ஆக இருந்தால் படம் 2 ல் காட்டியது போல் வரும்.
Delete Hidden Layers மறைந்திருக்கும் layer ஐ Delete செய்ய விரும்பினால்,இத use பண்ணவும் அது Artboard ஆக இருந்தாலும் சரி Delete Hiddden layer என்று தான் காட்டும்.
Quick Export as PNG(Shift+CtrI+')-இதை கிளிக் செய்யும்போது easy ஆகக் அந்த layer ஐ மட்டும் Export செய்து கொள்ளலாம்,எந்த இடத்தில் என்ன name ல் Export செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கவும்.
Hilight 1 என்பது எந்த location ,Hilight 2 என்பது என்ன name. அதேபோல் ஒவ்வொரு தடவையும் கேட்காது(Location/format)எப்படி என்பது பற்றி Quick Export As PNG/JPG/GIF தனி POST ல் பார்த்தோம்.
Export As.(Alt+Shift+CtrI+')-இதை கிளிக் செய்யும்போது easy ஆக அனைத்து layers ஐ மட்டும் Export செய்து கொள்ளலாம்,
இதை பற்றி தனி POST ல் பார்த்தோம்.
New Group-,புதிய குரூப் create செய்யும்போது Direct ஆ கீழே உள்ள Group icon ஐ கிளிக் செய்யலாம் அல்லது layer option ல் டாப் ரைட் corner Menu வில் உள்ள New Group option ஐயும் கிளிக் செய்யலாம். இந்தமாதிரி Group ன் (name,color,mode,opacity)கேட்க்கும்.அதன் name எப்போதும் Group 1 னு தான் இருக்கும்,விருப்பமெனில் உங்களுக்கு பிடித்த name வைத்து கொள்ளலாம்,ஆனால் என்ன தேவைக்காக Group create செய்கிறீர்களோ அதே name ல் வைப்பது நல்லது,
எல்லாம் type பண்ணி முடித்ததும் ok கொடுத்தால்,இந்தமாதிரி வந்திடும்.ஆனால் Groupகுள்ள ஏதும் இருக்காது(வெறும் Group தான் create ஆகும்.தவறுதலாக ஒரு layer ஐ தேர்வு செய்யம் இருந்தால் அதை Drag & Drop செய்து group குள்ள போடலாம்.
New Group from Layers-
இது ஒரு Container மாதிரி அதற்குள்ள என்ன வேணாலும் இருக்கலாம்(Text layer,Shape layer,Adjustment layer),Multiple layer தேர்வு செய்தும் கீழே உள்ள Group icon ஐ கிளிக் செய்யலாம்,இது போல.Group create செய்ததும் அதிலுள்ள Layers கள் கீழே படத்தில் பார்க்கலாம்.
Collapse All Groups- Group குள்ள எத்தனை layer இருந்தாலும் Groups மட்டுமே மட்டுமே தெரியுமாறு காட்டும்.
New Artboard-புதிய Artboard create செய்வது,அதில் விருப்பமான name & Size(w&H)அளவுகளை கொடுத்துக்கலாம்.அப்படியில்லையெனில் Photoshop அதுவாககவே Preset வைத்து இருக்கும் அதில் custom என்பதை கிளிக் செய்து அதில் ஒன்று தேர்வு செய்யலாம்,
Artboard from Group-
Artboard from Layers-Normal layer ல் இருந்து ArtBoard ஆக மாற்ற உதவுகிறது,layer ன் அளவுதான்(Size) Default ஆக இருக்கும் தேவையெனில் மாற்றிகொள்ளலாம்.
Delete செய்ய வேண்டும் என்று நினைத்தால் Artboard ஐ தேர்வு செய்து Delete icon/keyboard ல் Del கொடுத்தால் இப்படித்தான் Window வரும்,
Frame from Layer-இது cliping mask மாதிரி வேலை செய்யும்,அந்த frame(நீங்கள் எதை frame ஆக உருவாகப்போகிரீர்களோ அதை மட்டும்) அளவுகளை (W&H) கொடுத்துக்கலாம்.ஆனால் இதை தேர்வு செய்தால் cliping mask தனியாக கொடுக்கவேண்டிய அவசியமில்லை.இந்த frame எப்போதும் Blue கலரில் Hilight ஆக இருக்கும் நீங்களே பார்க்கலாம்(எதை frame செய்தீர்களோ அந்த layer ஐ கிளிக் செய்தால் எதிலிருந்து எதுவரை frame செய்தீர்கள் என்று காட்டும்),frame ஐ move/scale up/scale down செய்ய வேண்டும் என்று நினைத்தால் layer panel ல் உள்ள frame ஐ மட்டும் தேர்வு செய்தால்,அந்த frame க்குள் இருக்கும் அனைத்தும் move/scale up/scale down செய்யலாம்,அதேபோல்frame க்குள் இருக்கும் content ஐ மட்டும் edit செய்ய வேண்டுமென்றால் frame ஐ தேர்வு செய்யாமல் அதன் பக்கத்தில் உள்ள layer ஐ தேர்வு செய்யவும்(move/scale up/scale down) இதை செய்ய வசதியாக இருக்கும்.இந்த option ஐ கிளிக் செய்தால் normal layer ஆனது smart object layer ஆக மாறிவிடும்,அதேபோல் Normal/smart object layer ஆக இருந்தால் மட்டும் ‘frame from layers’காட்டும்,(Text/shape/Adj.Layer ஆக இருந்தால் காட்டாது.
Lock Layers-ஆல்ரெடி பார்த்தோம்.
Convert to Smart Object- ஒரு layer Normal(Rasterised)இருந்தால் அதை smart object layer ஆக மாற்றலாம்,
Edit Contents-ஒரு layer smart object ஆக இருந்தால் அதில் உள்ள content ஐ மாற்றி அமைக்க உதவும்.layer ஐ கிளிக் செய்திருந்தால் option hide ஆகியிருக்கும்,smart object layer ஐ கிளிக் செய்தால் மட்டுமே Edit content option ஐ பார்க்க முடியும்.இதை பற்றி தனி POST ல் பார்த்தோம்.குறிப்பு:click செய்யும்போது கவனமாக கிளிக் செய்யவும் அப்பதான் இதை Access பண்ண முடியும்.
Blending Options-எந்த layer ஐ கிளிக் செய்தாலும் வரும் மற்றும் அதற்கு உண்டான Blending option ஐ பார்க்கலாம்,எது தேவையோ அதை கிளிக் செய்யலாம்.Blending option ஐ பற்றி தனி ‘POST’ல் பார்ப்போம்.
Edit Adjustment-Adj.ayer உள்ள content ஐ edit செய்வது.layer ஐ கிளிக் பண்ணியிருந்தால் Edit Adjustment option வராது,Adj.layer ஐ கிளிக் செய்தால் மட்டுமே Edit Adjustment option ஐ பார்க்க முடியும்.
Create Clipping Mask-
இது கீழே உள்ள layer உடன் Clip செய்வது.இதை பற்றி தனி ‘POST’ல் பாப்போம்.
Link Layers-ஆல்ரெடி பார்த்தோம்.
Select Linked Layers-நிறைய layer இருந்தால் தேடுவது கடினம்,அப்போது இந்த option ஐ use பண்ணவும்,link செய்திருந்த layer மட்டும் Hilight ஆக காட்டும்,ஆனால் அதற்கு link செய்து இருக்க வேண்டும்.
எ.கா,
Merge Down/Merge Layers -நீங்கள் தேர்வு செய்த layer உடன் கீழே உள்ள layer ஐ Merge(இணைப்பது).தேர்வு செய்தும்(Ctrl கீயை use பண்ணி Multiple layer ஐ தேர்வு,Ctrl கீயை use பண்ணி layer ஐ தேர்வு செய்யாமலும் ஆனால் கீழே உள்ள layer ஐ மட்டும் Merge Down செய்யும் கீழே உள்ள layer Eye View இல்லாமலிருந்தால் ‘Merge Down‘ use பண்ணமுடியாது.ஆனால் இரண்டு shape கலை Merge Down செய்து அந்த ‘Merge Down’ name ‘Merge shape’s என்று மாறிவிடும்.அப்புறம் என்ன shape use பண்ணிங்களோ அந்த Tool ஐ எடுத்து அதன் Properties ஐ தொடர(continue) முடியும்.அதேபோல் வேறு வேறு(Text Layer & Shape Layer) properties கொண்ட layer களாக இருந்தால் அதன் properties ஐ தொடர முடியாது,ஏனெனில் அது Normal(Rasterised)layer ஆகிவிடும்.
எடுத்துக்காட்டாக படத்தில் பார்க்கலாம்,
ரொம்ப குழப்பிக்க வேண்டாம்(ஆனால் தெரிந்து கொள்ளவேண்டும்,எந்த option எதுக்கு use ஆகும் என்று தெரிந்துகொண்டால் தேட தேவையில்லை.),சுருக்கமா சொல்லனும்னா,
Normal Merge | ஒரே image ஆக Flat(rasterised) ஆ வந்திடும். |
Shape Layers Merge | அதன் properties ஐ use பண்ணலாம். |
Adj.layer+Text layer ஏனெனில் வேற வேற properties | Rasterised +Text layer name |
Adj.layer+Normal layer ஏனெனில் வேற வேற properties | Rasterised +Adj.layer name |
2ம் Shape layer | Access shape layer properties |
Merge Visible -layer panel ல் பார்க்ககூடிய(Eye View
) layer மட்டுமே Merge(இணைந்து)ஆகிவிட்டு ஒரு image ஆகிவிடும்.
Flatten Image-layer panel ல் உள்ள அனைத்தும் Flat ஆ ஒரே image(Rasterised) ஆ வந்துவிடும்.ஆனால் layer panel ல் Eye View இல்லாமலிருந்தால் Delete பண்ணவா என்று கேட்கும்.
Don’t show again என்பதை கிளிக் செய்தால் மறுபடியும் கேட்காது,
Recommended, Tick செய்யாமலிருப்பது நல்லது.
Animation Options -File ல் GIF image create செய்தால் இந்த control காட்டும் முறை,
Always show என்பது எப்போதுமே layer panel ல் காட்டிக்கொண்டே இருக்கும்,
Always hide என்பது எப்போதுமே layer panel ல் மறைந்தே இருக்கும்,
Automatic என்பது அதன் control தேவைப்படும்போது மட்டுமே use பண்ணலாம்,Default ஆ இதுதான் இருக்கும்.
Panel Options - Hilight 1 என்பதை தேர்வு செய்தால் எதுவுமே (Thumbnail)
layer panel ல் தெரியாது
. Hilight 2 என்பதை தேர்வு செய்தால், (Thumbnail) சிறியதாக தெரியும்.
Hilight 3 என்பதை தேர்வு செய்தால், (Thumbnail) கொஞ்சம் பெரியதாக தெரியும்.
Hilight 4 என்பதை தேர்வு செய்தால், (Thumbnail) ரொம்ப பெரியதாக தெரியும். Easy ஆக layer ல் என்ன இருக்கு என்பதை கண்டுபிடிக்கலாம்,ஆனால் layer நிறைய இருக்கும்போது உங்களுக்கு தேவையான layer ஐ தேடுவது கொஞ்சம் கடினம்.ஏனெனில் (Thumbnail) ரொம்ப பெரியதாக இருக்கும்.
இதில் (Thumbnail)view சைஸ் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.ஆனால் ‘Default’ ஆ இருப்பதே நல்லது.
Use Default Masks on Fill Layers - tick செய்தால் mask create செய்யும்போது mask ல் உள்ள layer Fill layer ஆக எடுத்துக்கும்.
Expand New Effects - tick செய்தால் layer ல் ஏதாவது Effect apply பண்ணியிருந்தால் என்ன effect apply பண்ணியிருக்கிரீர்கள் என்று காட்டும்.காட்டவேண்டாம் என்று நினைத்தால் சிறிய ‘Arrow’இருக்கிறது அதை கிளிக் செய்தால் மறைந்து விடும்.
Add "copy" to Copted Layers and Groups- tick செய்தால்,ஒரு layer ஐ Duplicate(Ctrl+J)செய்யும்போது அந்த layer உடன் Copy என்று name காட்டும்.
v
Close-என்பது எதை கிளிக் செய்கீர்களோ அந்த panel மட்டும் Close ஆகும்.
எ.கா கீழே படத்தை பார்க்கவும்,
Close Tab Group- இந்த 3 ம சேர்த்ததுதான் ஒரு Group,இந்த option ஐ கிளிக் செய்தும் Group மொத்தமாக Close ஆகிடும்,எதவுமே இருக்காது.மறுபடியும் வேண்டுமென்றால் Window-->properties/path/channels ஐ கிளிக் செய்யவும்.
Layer Right Click Option:
Blending Options-பார்த்துட்டோம்
Edit Adjustment-பார்த்துட்டோம்
copy CSS-பார்த்துட்டோம்
copy SVG-பார்த்துட்டோம்
Duplicate Layer-பார்த்துட்டோம்
Delete Layer-பார்த்துட்டோம்
Group from Layers-பார்த்துட்டோம்
Quick Export as PNG-பார்த்துட்டோம்
Export As-பார்த்துட்டோம்
Artboard from Layers-பார்த்துட்டோம்
Frame from Layers-பார்த்துட்டோம்
Convert to Frame-பார்த்துட்டோம்
Convert to Smart Object௦ஒரு layer ஐ smart object ஆக மாற்றுவது,இத ஓற்றி தனி ‘POST’ல் பார்த்தோம்.
Rasterize Layer-Text/shape/Adj.Layer/Layer Mask இதைஎல்லாம் Normal Pixel layer ஆக மாற்றுவது.
Rasterize Layer Style-ஒரு layer ல் ஏதாவது effect use பண்ணியிருந்தால் அதை Rasterize Layer Style(Normal Pixel layer)ஆக மாற்றுவது.
Enable Layer Mask-ஒரு layer க்கு mask உருவாக்கி அதை Enable/Disable செய்யலாம்,தேவையானபோது மட்டும் use பண்ணவும்.
Enable Vector Mask-ஒரு layer க்கு vector mask உருவாக்கி,அதை Enable/Disable செய்யலாம்,தேவையானபோது மட்டும் use பண்ணவும்.
இப்படி create செய்யலாம்,
Layer-->Vector Mask-->Reveal All
Create Clipping Mask-ஆல்ரெடி பார்த்துட்டோம்.
Link Layers-ஆல்ரெடி பார்த்துட்டோம்.
Select Linked Layers-ஆல்ரெடி பார்த்துட்டோம்.
Copy Layer Style-ஒரு layer க்கு blending option ல் ஏதாவது effect கொடுத்திருந்தால்,அந்த effect ஐ வேற layer க்கு அதே effect apply பண்ண வேண்டுமேன்றால் அதை paste செய்வதற்கு useful ஆ இருக்கும்.
paste Layer Style-வேற ஒரு layer ன் effect ஐ,குறிப்பிட்ட layer க்கு effect apply பண்ண வேண்டுமென்றால் இதை use பண்ணலாம்.
Clear Layer Style-layer ல் உள்ள அனைத்து style களும் ‘Remove’ஆகிடும்.வெறும் layer மட்டும்தான் இருக்கும்.
Copy Shape Attributes-Fill color/Stroke color & stroke size இதையெல்லாம் Copy&paste செய்வதற்கு use ஆகும்.ஆனால் அது shape layer ஆக தான் இருக்கவேண்டும்.
Paste Shape Attributes-Copy Shape Attributes Copy செய்ததை,Fill color/Stroke color & stroke size இதையெல்லாம் paste செய்வதற்கு use ஆகும்.
Copy Layer Style வேறு Copy Shape Attributes வேறு இரண்டையும் குழப்பிக்கவேண்டம்.
Release from Isolation-
Merge Layers-ஆல்ரெடி பார்த்துட்டோம்.
Merge Visible-ஆல்ரெடி பார்த்துட்டோம்.
Flatten Image-ஆல்ரெடி பார்த்துட்டோம்.
No Color-
முக்கியமான ஒவ்வொரு layer க்கு color கொடுத்தால்,அதிக layer இருக்கும்போது தேடுவது சுலபம்.
எ.கா,
Text layer-Yellow color
Pixel layer-Green color இந்தமாதிரி உங்களுக்கு உங்களுக்கு விருப்பமான color கொடுக்கலாம்.
Postcard-ஒரு படத்தையோ/Text யோ 3D object ஆக மாற்ற உதவும்.இதை பற்றி தனி ‘POST’ல் பாப்போம்.இதை கிளிக் செய்தால் 3D workspace க்கு convert ஆகிடும்.
New 3D Extrusion from Selected Layer-ஒரு Text ஐ 3D object ஆக மாற்ற உதவும்.
New 3D Extrusion from Current Selection-ஒரு படத்தையோ/Text யோ 3D object ஆக மாற்ற உதவும்.ஆனால் Selection இருந்தால் மட்டும் வேலை செய்யும்.
Layer Thumbnail Right Click- layer Thumbnail ஐ மட்டும் கிளிக் செய்தால் இந்தமாதிரி options ஐ பார்க்க முடியும்.Adj.layer ஐ கிளிக் செய்தால் மட்டும் தான் Hilight 1 என்பது Enable ஆகும்.அதேபோல் ஏதாவது Selection இருந்தால் தான் Hilight 2 ஒப்யியன் Enable ஆகும்.
Edit Adjustment-Adj.layer ஐ Edit செய்வது.
Select Pixels- குறிப்பிட்ட layer ஐ மட்டும் selection செய்வது நன்றாக புரிந்து கொள்ளுங்கள் selection வேறு select வேறு,

Add Transparency Mask-selection இருந்தால்தான் Add Transparency/Subtract/Intersect Transparency Mask இந்த 3 option ம் work ஆகும்,அந்த layer ல் உள்ள Transparency Area வை Mask செய்வதற்கு உதவும்.
Subtract Transparency Mask-selection இருந்தால்தான் Add Transparency/Subtract/Intersect Transparency Mask இந்த 3 option ம் work ஆகும்,அந்த layer ல் உள்ள Transparency Area வை Mask செய்வதற்கு உதவும்.
Intersect Transparency Mask-selection இருந்தால்தான் Add Transparency/Subtract/Intersect Transparency Mask இந்த 3 option ம் work ஆகும்,அந்த layer ல் உள்ள Transparency Area வை Mask செய்வதற்கு உதவும்.
இதெல்லாம் layer க்கும் color கொடுப்பது,இதை மேலே பார்த்தோம்.


























































0 Comments